நீங்களா சார் இப்டி..? தமன்னாவின் ஹாட் போட்டோவை ஷேர் செய்த ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம்.. சர்ச்சைக்குள்ளான புகைப்படம் வைரல்..

By Begam on மாசி 21, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் ஒருவராக வலம் வருபவர் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.   இப்பொழுதும் கூட இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு சவால் விடும் வகையில் இவரின் ஒளிப்பதிவு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஒளிப்பதிவு மட்டும் இன்றி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். பி.சி. கேமராவை திறந்து எதனை எடுத்துக் காட்டுகிறாரோ அதுதான் ப்ஃரேம் அதுதான் ஆங்கில்.

   

பி.சி. ஒளிப்பதில் ஒவ்வொரு படங்களிலும் தன் ஒளிப்பதிவால் தனி முத்திரை பதித்தார். ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்டது இவரது ‘குருதிப்புனல்’ திரைப்படம். குறிப்பாக இயக்குனர் மணிரத்தினத்தின் மெளன ராகம், நாயகன், அலைபாயுதே போன்ற படங்களில் இவரின் பங்கு வார்த்தைகளால் சொல்ல முடியாதது.  பி.சி. கேமராவில் கை வைத்தால் அதுக்கூட நடிக்கும் என்பார்கள். சினிமாவில் கேமராவை வைத்து பல டிரிக் ஷாட் எடுப்பதில் பி.சி.க்கு நிகர் பி.சி.யே தான்.

   

 

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் பி.சி. நிகழ்த்திய அற்புதம் தான் குள்ளன் கமல் இன்றளவும் அது எப்படி சாத்தியம் என்று நம்மை யோசிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.  பி.சி.ஸ்ரீராமின் கலை சேவையைப் பாராட்டி 50வது சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசு அவருக்கு விருது வழங்கி கவுரவித்தது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது நடிகை தமன்னா  குளித்து முடித்து டவலுடன் கண்ணாடி முன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர், அவரின் கலைத்திறமையை பாராட்டினாலும், ஒரு சிலரோ மோசமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by PC Sreeram Isc (@pcsreeram.isc)