இன்னும் 5 நாட்களில் திருமணம்… திருமணத்தை திடீரெனெ நிறுத்திய பிரபல நடிகை… என்ன காரணம்..?

By Soundarya on ஆவணி 22, 2025

Spread the love

நடிகர் ரித்விகா பரதேசி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி போன்ற படங்களில் நடித்த இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த ஷோவில் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில் ஒரு மாதத்திற்கு முன்பாக ரித்விகா தனது காதலர் வினோத் லக்ஷ்மணன் என்பவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.

இதனையடுத்து ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது அந்த திருமணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ரித்விகா தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.