BREAKING: பிரபல நடிகை சற்றுமுன் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்…!

By Swetha on ஆவணி 16, 2026

Spread the love

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை அனன்யா ராஜ் (28) காலமான செய்தி ரசிகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டாக கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் மனநலப் பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், ஜூலை 15-ம் தேதி உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இளம் வயதில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த மறைவு, பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘7 ஹவர்ஸ் டு கோ’ , ‘தி ஃபைனல் எக்சிட்’ , ‘கோஸ்ட்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் அனன்யா ராஜ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்து தனது இயல்பான நடிப்பால் பலரின் கவனத்தை ஈர்த்தார். 28 வயதே ஆன திறமைமிக்க ஒரு இளம் நடிகை திடீரென உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.