கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவரும் பிரபல நடிகருமான தேவன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆலப்புழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் தீவிரமாகப் பின்பற்றும் சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளையும் லட்சியங்களையும், கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவில் பயணித்தும் அடைய முடியவில்லை என்ற ஆழமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மக்கள் சேவை மற்றும் சமூக மாற்றத்தை முன்னிறுத்தித் தான் மேற்கொண்ட அரசியல் பயணத்தில், எதிர்பார்த்த கொள்கை இலக்குகளைக் சாத்தியப்படுத்த முடியாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்து அவர் தனது விலகல் கடிதத்தை அளித்துள்ளார்.
