காலை 8.30 மணிக்கு டப்பிங் பேசிய நடிகர் மாரிமுத்து…! உயிர் இழந்தது எப்படி..??

By admin on புரட்டாதி 8, 2023

Spread the love

எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் இயக்குனர், மாரிமுத்து(57) மாரடைப்பால் காலமானார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மயங்கி விழுந்தார். அவரை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

   

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து அரண்மனைக்கிளி, நடித்த படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடிகர் மாரிமுத்து 2008-ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

   

 

 

இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “யுத்தம் செய்” திரைப்படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானார். இவர் கண்ணும் கண்ணும், புலி வால் ஆகிய படங்களை மாரிமுத்து இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர்களான  மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். நடிகர் மாரிமுத்து வாலி, சண்டை கோழி, பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.