மேற்கு கோதாவரி மாவட்டம் சின்சினாடா பாலத்தில் இருந்து குடும்பத்துடன் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், நீரில் மூழ்கி மாயமான இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன தந்தை சீனிவாசு (45) மற்றும் மகன் ஈஸ்வர் (16) ஆகியோரின் சடலங்கள் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் திண்டி பகுதி அருகே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மகள் நித்யா ஸ்ரீயை (15) தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து கோதாவரி ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
