ஐயோ காப்பாத்துங்க… சுவருக்கு பின்னால் கொடூரத் தாக்குதல்… கிழக்கு டெல்லியில் நள்ளிரவில்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

கிழக்கு டெல்லியின் நியூ அசோக் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்கள் சேர்ந்து அவரைச் சுவருக்குப் பின்னால் வைத்துத் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தாக்குதலுக்கான காரணம் மற்றும் தப்பி ஓடியவர்கள் குறித்த விவரங்களை அறிய காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

   

கொலை செய்யப்பட்ட நபரைக் கண்டறியவும், தப்பியோடிய இரு குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.