திக்.. திக்..! நள்ளிரவு வெறியாட்டம்… துடிதுடித்து விழுந்த மாமியார்… குடும்பத்தை வேட்டையாடிய கொடூரன்… நடுங்க வைக்கும் ரத்தக் களரி…!!

By Gayathri on கார்த்திகை 4, 2026

Spread the love

ஹைதராபாத் புறநகர் மீர்பேட்டின் ஜெயஸ்ரீ காலனியில் ஏற்பட்ட குடும்பப் பூசல், கோரமான இரட்டைக் கொலையில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த மருமகன் தன் குடும்பத்தினர் மீது நடத்திய திடீர் கத்திக்குத்து வெறியாட்டத்தில், மாமியார் மற்றும் மைத்துனரின் மனைவியான ரேஷ்மா ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, மகள் மற்றும் மைத்துனர் யூசுப் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில் யூசுப் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபரீதம் நிகழ்வதற்கு முன்பாகவே, அச்சுறுத்தல் குறித்து காலையிலேயே காவல் நிலையத்தில் முறையிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீர்பேட் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர், சம்பவ இடத்தில் தீவிர தடயங்களைச் சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.