கோவையில் அதிர்ச்சி..! 19 வயது மகனுக்கு தாய்… 27 வயது வாலிபருக்கு கள்ளக்காதலி… கணவர் திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் காளிமுத்து. 27 வயதான இவர்  கடந்த 10 வருடங்களாக திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானகுமார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (38). இவர்கள் கடந்த 22 வருடத்திற்கும் மேலாக திருப்பூரில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இவர்களுடைய மகன் கிஷோர்(19).

இவர் திருப்பூர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர்கள் உறவினர் என்பதால் காளிமுத்து அடிக்கடி ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சந்தானகுமார் இருவரையும் கண்டித்துள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு கோவையிலிருந்து மதுரை சென்ற ரயில் முன்பாக ஜெயலட்சுமி மற்றும் காளிமுத்து இருவரும் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.