மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆனது மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி செயல்படுகின்றது. தங்களுடைய இணைப்பு பள்ளிகளுக்கான வரையறைகளை மத்திய கல்வி அமைச்சக ஆலோசனையின் படி அவ்வபோது மாற்றி அமைக்கப்படுகிறது . அதற்கான பாட புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான NCERT மூலமாக வழங்கி வருகின்றது. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த வருடம் முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்ச்சி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பில் இரண்டு முறை பொது தேர்வு எழுதுவதும் அறிமுகமாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு முதல் ஏற்கனவே இருந்த ஐந்து முதன்மை பாடங்களுடன் ஒரு திறன் சார்ந்த பாடம் மற்றும் கூடுதலாக ஒரு இந்திய மொழி பாடத்தையும் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு இதுவரை தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன் கூடுதலாக இன்னொரு மொழி பாடமும் படிக்க வேண்டும். இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் தொழில் சார்ந்த ஒரு பாடத்தை பயில வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணக்கிட்டு சிந்தனை, உடற்கல்வி, நலவாழ்வு, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
