திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். 40 வயதான இவர் தனியார் கழிவுநீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகிறார். இந்நிலையில் இளங்கோவனுக்குக்கும் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணை இளங்கோவன் தான் குடியிருக்கும் வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆனால் மாது அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது இளங்கோவிற்க்கு பிடிக்கவில்லை. இதனால் மாதுவுக்கு வேறு யாரிடமும் தொடர்பு இருப்பதாக கூறி இளங்கோவன் வாக்குவாதம் செய்துள்ளார். சம்பவத்தன்று மாதுவை வீட்டிற்கு அழைத்து வந்த இளங்கோவன் தனிமையில் இருந்துள்ளார் .அதன் பிறகு செல்போனில் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு தகராறு செய்ததில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன் வீட்டில் வைத்திருந்த குழவிக்கல்லை எடுத்து பலமுறை குத்தியதில் அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளார். மறுநாள் வந்துபார்த்தபோது மாது பேச்சு மூச்சு என்று கிடந்ததால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளங்கோவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…