“வீட்டுக்கு போனா நம்மள பிரிச்சிடுவாங்க” கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு… வாயில் நுரை தள்ளியவாறு போலீஸ் ஸ்டேஷனில் கதறல்… தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on புரட்டாதி 21, 2025

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தங்கவேல்சாமி. 28 வயதான இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளார்கள். தங்கவேல்சாமி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தான் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசித்து ஆட்டோ டிரைவர் சுப்பையா மனைவி பார்வதியோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். இருப்பினும் தங்கவேல் சாமியுடன் பேசி பழகி வந்துள்ளார் பார்வதி. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது .இதனை அடுத்து குடும்பத்தினர் அவர்களை கண்டித்துள்ளார்கள் .

பார்வதி தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறி தங்கவேல் சாமியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் தங்கவேல்சாமி குலசேகரபட்டினத்திற்கு காரில் பார்வதி அழைத்து சென்றுள்ளார். நம் வீட்டிற்கு சென்றால் குடும்பத்தினர் நம்மை பிரித்து விடுவார்கள். எனவே நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்கள். அதன்படி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி குடித்துள்ளனர்.

   

பிறகு வாயில் நுரை தள்ளுபடி போராடி அவர்கள் குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார்கள். காரை வெளியே நிறுத்திய அவர்கள் நாங்கள் இருவரும் விஷம் குடித்து விட்டோம். எங்களை காப்பாற்றுங்கள் என்று  அழுதவாறு சென்றார்கள். உடனே அங்கிருந்து போலீசார் அதிர்ச்சி அடைந்து இரண்டு  பேரையும்  மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.