அம்மா… நல்லகாலம் பொறக்கப் போகுது நகையைக் கழட்டித் தாங்க… சாதுக்கள் போல் நடித்து… காரில் பெண்களிடம் நகை கொள்ளையடித்த அதிர்ச்சி போலி சாமியார்கள்… உ . பி – யில் பரபரப்பு…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நகரைச் சேர்ந்த ஜஹாங்கீர் மற்றும் குர்விந்தர் ஆகியோர் சாமியார் வேடமிட்டு, கார்களை வழிமறித்து பெண்களிடம் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர். அவர்கள் காரில் இருந்த பெண்ணிடம் நைசாக பேசி அவரது தாலிச்சங்கிலி, தங்கச் சங்கிலி மற்றும் மோதிரத்தை நூதன முறையில் திருடிய காட்சிகள் ஒரு காரின் டேஷ்கேமில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பிஜ்நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த போலி சாமியார்கள் இருவரையும் அரித்துவாரில் கைது செய்தனர். பிஜ்நகர் காவல் கண்காணிப்பாளர் காவல் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட்டார்.

   

https://twitter.com/ashishpaswan0/status/2094416730357661879/video/1

   

பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் இது போன்ற போலி சாமியார்களின் ஏமாற்று வேலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்தோடு, அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.