சிறுமி என காட்டி 40 வயது பெண் மோசடி….! அரசு பேருந்துகளில் போலி ஆதார் அட்டைகள்….வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

கர்நாடக மாநில பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கும் ‘சக்தி’ திட்டத்தில், போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் மோசடி நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகுதியற்ற பல பயணிகள் மற்றவர்களின் ஆதார் அட்டையில் தங்கள் புகைப்படத்தை ஒட்டியும், நகல் அட்டைகளைத் தயாரித்தும் முறைகேடாகப் பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக, 40 வயது பெண் ஒருவர் 10 வயது சிறுமியின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலவசமாகப் பயணம் செய்தபோது  பிடிபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற திட்டமிட்ட ஏமாற்று வேலைகளால் அரசாங்கத்தின் பொது நிதி வீணாவதுடன், உண்மையான பயனாளிகளுக்குச் சேர வேண்டிய நன்மைகளும் தட்டிப்போகின்றன.

   

இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கப் பேருந்துகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும், தவறு செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் நேர்மையான முறையில் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, அரசு நிர்வாகம் உடனடி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.