Categories: சினிமா

வில்லாதி வில்லன் விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. வெறித்தனமான கம்போ..!

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் சிறப்பு கதாபாத்திரம் என சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று அற்புதமாக நடிக்க கூடிய திறமை கொண்டவர். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறி இருந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரெயின் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் விலங்கியல் இதனைத் தவிர விஜய் சேதுபதியின் கைவசம் மூன்று திரைப்படங்கள் இருப்பதால் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் சமீபத்தில் இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பானது உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனதக்காகவும் அறிவிப்பு வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று கசிந்துள்ளது. அதன்படி வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சூப்பர் டூலெக்ஸ், மாமன்னன், புஷ்பா போன்ற அதிரடி படங்களில் அதிரடி வில்லனாக நடித்து வரும் மிகப்பெரிய மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

7 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

7 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

7 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

7 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

7 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

8 மணத்தியாலங்கள் ago