இந்தியாவில் வருகின்ற 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகின்றது. 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இப்படியான சூழலில் மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை தயாராகுமாறு சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.
வாட்ஸ் அப்பில் பரவி வரும் ஒரு தகவலில் ரிசர்வ் வங்கி 2025 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை நிறுத்தும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 75 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அக்டோபர் மாதத்திற்குள் குறைக்க வேண்டும் என்றும் 90% புழக்கத்தை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குறைக்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏடிஎம்களில் இனி 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் எனவும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களை செலவழித்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முற்றிலும் போலியானது என்பதை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பு குழு உறுதி செய்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும் எனவும் இது போன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத…
பாதுகாப்பான மற்றும் உறுதியான லாபம் தரும் முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு அஞ்சலகத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Post Office Time Deposit…
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…