கம்பத்தில் கள்ளக்காதலனை கட்டி வைத்த கணவன்… சமாதானம் செய்து வாழ வைத்த பெரியவர்கள்… பழிவாங்க மனைவி செய்த கொடூர சம்பவம்…!

Spread the love

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த மொய்யா கவுண்டர் என்பவருடைய மகன்தான் சிவகுமார்(36). எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவருக்கு மாராயி என்பவர் உடன் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே சிவக்குமார் கடந்த 28ஆம் தேதி தன்னுடைய அப்பாச்சி பைக்கில் குப்பனூரில் உள்ள சந்தைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது இரவு 7.30 மணி அளவில் வாழப்பந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மலைப்பாதை ஓரத்தில் சிவகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. சம்பவம் நடந்த இடத்தில் உடைந்து கிடந்த ஹெல்மெட் ஒன்றையும் அந்த இடத்தில் சாலையோரத்தில் உள்ள ஐந்து அடி பாலத்தில் கிடந்த இரும்பு பை போன்றையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமார் மனைவி ஏற்காடு மருதயாங்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 24 வயதுடைய மகன் சந்தோஷ் என்பவருடன் கடந்த இரண்டரை வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது சிவக்குமாருக்கு தெரிய வந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. அதே சமயம் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்ற நிலையில் அந்த பெண் இதுபோல இனி செய்யமாட்டேன் என்று சிவகுமாரிடம் மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். பிறகு ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் அந்தப் பெண் சந்தோஷுடன் பேசியுள்ளார்.

எனவே சந்தோஷ் சிவகுமார் வீட்டில் இல்லாத போது அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனை அறிந்த சிவகுமார் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து ஊர் பெரியவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் சிவக்குமார் தனது பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவக்குமார் மனைவியை விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில்களை கூறியதால் அவர் மீது சந்தேகம் வந்ததால் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டம் தீட்டி சந்தோஷ் நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மலைப்பாதையில் வழிமறித்து இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

17 minutes ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

22 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

25 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

49 minutes ago

“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…

50 minutes ago