சென்னை சேத்துப்பட்டில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் இயக்கப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் தற்போது இயக்கப்படவில்லை என்றும் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
