தமிழக அரசியலில் புதிய திருப்பம்… திமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்த முக்கிய புள்ளி… ஸ்டாலினுக்கு செம ஷாக்….!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.

இந்நிலையில் திமுக, அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளார். காலை முதலே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திமுகவின் தஞ்சை மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஜெகதீச பாண்டியன், காமராஜரின் பேத்தி மயூரி, நடிகர் வேலராம மூர்த்தியின் மகன் ராஜ்மோகன் உள்ளிட்டோறும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்