காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… கொத்தாக தூக்கிய ஸ்டாலின்… கூண்டோடு திமுகவில் ஐக்கியம்…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதே சமயம் தனது கூட்டணியை பலமாக வைத்துள்ள திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்க அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அதிமுக, தமிழக வெற்றி கழகம், பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை திமுக துண்டு போர்த்தி மதியழகன் வரவேற்றார்.