தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் விஜயும் களமிறங்கியுள்ளதால் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் விஜய்யையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் இபிஎஸ் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் விஜய் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்.
இதனிடையே கட்சி ஆரம்பித்த புதிதில் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளை நாசுக்காக தன்வசம் தமிழக வெற்றி கழகம் கட்சியை இழுத்தது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு களமே தலைகீழாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் இருக்கும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியினரை வலை வீசி தேடி நாம் தமிழர் கட்சிக்கு கூட்டி வரும் ஸ்பெஷல் அசைன்மென்ட்டில் தம்பிகள் இறங்கி இருக்கிறார்களாம். இதனால்தான் ராணிப்பேட்டை வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளரான அஜய் ஆதரவாளர்களோடு நாம் தமிழர் கட்சிக்கு தாவியதாக கூறப்படுகிறது.
