FLASH NEWS: அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்…. சற்றுமுன் விலகிய முக்கிய புள்ளி…. எடப்பாடிக்கு விழுந்த பேரிடி….!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறன் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையிலிருந்து தற்போதைய தலைமை தடம் மாறிச் செல்வதால், மிகுந்த மனவேதனையுடனும் வலியோடும் இந்த முடிவை எடுப்பதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு அடுத்தடுத்து வெற்றி பெற்ற இவர், 2021 தேர்தலின் போது அதே தொகுதியில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடந்த தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கட்சியிலிருந்து விலகியிருப்பது கடலூர் மாவட்ட அதிமுக வட்டாரத்திலும் தமிழக அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.