“பாப்பா என்கூட வா…” 10 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திய 45 வயது நபர்…. வீட்டு வாசலில் விளையாடிய குழந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அண்ணாமய்யா மாவட்டம் ரயில்வே கோடூரில் 10 வயது சிறுமியை 45 வயது நபர் ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த சீராலா ரமேஷ் நாயுடு (45) என்ற நபர் அச்சிறுமியை ஆட்டோவில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தச் சிறுமி அழுதபடியே கூறிய வார்த்தைகளைக் கேட்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ரயில்வே கோடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தலையீடோ அல்லது ஆளும் ஜனசேனா கட்சியின் ஆதரவோ இன்றி குற்றவாளிக்கு உடனடியாக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற காமாந்தகர்களைத் தூக்கிலிட வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் போராட்டத்திலும் கொந்தளிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.