இபிஎஸ்-க்கு அடுத்து அதிர்ச்சி… செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து விலகும் தங்கமணி?… பரபரப்பு தகவல்…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர படுத்தியுள்ளன. தேர்தல் களத்தில் கட்சிகள் நேரடியாக செயல்பட தொடங்கும் முன்னரே கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் அரசியல் வியூகங்கள் மறைமுகமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் அண்மைக்கால அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் செங்கோட்டையன் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

நேற்று அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இதனிடையே அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. அதில் வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்பி உதயகுமார், ஓ எஸ் மணியன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இதனால் செங்கோட்டை அணை போடவே தங்கமணியும் அதிமுகவிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்படுகிறது.