“அடிக்க அடிக்க உயர்வோம்”… அன்பில் மகேஷ் கைதால் கொதித்த சேகர்பாபு… சென்னையில் பரபரப்பு பேட்டி….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திமுக-வை நோக்கி இதுபோன்று ஆயிரக்கணக்கான பழிவாங்கும் நடவடிக்கைகளும், உண்மைக்கு மாறான அவதூறு வழக்குகளும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், அடக்குமுறைகள் அதிகரிக்கும் போதெல்லாம் தங்கள் இயக்கம் மேலும் வீறு கொண்டு எழும் என்றும், “அடிக்க அடிக்க உயர்கின்ற பந்தாக” கழகம் மாறும் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தச் சோதனையையும் சட்ட ரீதியாகவும் உறுதியாகவும் சந்திப்போம் எனத் தெரிவித்தார்.