ஐயோ… என்னை மன்னிச்சுடுடி… நான் உன்னோட வாழணும்… ஆசை வார்த்தை கூறி கூப்பிட்ட கணவன்… ரீல்ஸ் போட்ட அடுத்த நிமிடம் நடந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் பாசில்லா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ் என்ற பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி, குர்மீத் அவரைச் சந்திக்க அழைத்துள்ளார்.

அவரைச் சந்திக்கச் சென்ற சரோஜ், குர்மீத்துடன் இணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் பின்னணியில் சோகப் பாடல் ஒலிக்க, குர்மீத் வெற்றிச் சின்னத்தைக் காட்டிச் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வீடியோவை பதிவு செய்த சில நிமிடங்களிலேயே, புதர்கள் நிறைந்த ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்குச் அழைத்துச் சென்று, கூர்மையான ஆயுதத்தால் சரோஜை குர்மீத் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு தடயங்களை மறைக்க உடலை மண்ணில் புதைக்க முயன்றபோது, அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு ஓடிவந்துள்ளார். நபர் வருவதைக் கண்ட குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சரோஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முன்னாள் கணவர் குர்மீத் சிங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“24 வருஷத்துக்கு அப்புறம் போட்ட அதிரடி உத்தரவு”…. இனி ஒவ்வொரு வீட்டுலயும் இது கட்டாயம்…. ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கும் விஜய்….!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மழைநீரைச் சேமிக்கவும் மிக முக்கியமான அரசாணை ஒன்றை…

7 minutes ago

“சீட்டு இருந்தும் உள்ள விடல…” கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் காயம்…. கொந்தளித்த பொதுமக்கள்… ராவணன் வத நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு… பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ரங்கலீலா மைதானத்தில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியின் போது, காவல்துறையினரின் கெடுபிடி மற்றும் மோசமான…

24 minutes ago

குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் இறந்த தாய்…. தந்தையிடம் பேத்தியை ஒப்படைக்காத தாத்தா… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தாயை இழந்த 4 வயது பெண் குழந்தையை அதன் இயற்கை பாதுகாவலரான தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என தாய்வழி தாத்தாவுக்குப்…

32 minutes ago

“தலை முடியை பிடித்து இழுத்த தாய்…” எட்டி உதைத்த வளர்ப்பு தந்தை… லிப்டில் சிறுவனுக்கு நடந்த கொடுமை…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மலேசியா நாட்டின் கெடா மாநிலம் அலா ஸ்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்ட்டிற்குள், குழந்தைக்கு வாங்கிய பிராம் வண்டி…

1 மணத்தியாலம் ago

சிக்னலில் நின்றவர்களை அடித்து தூக்கிய லாரி…! துடிதுடித்து இறந்த மாணவி… தூக்கி வீசப்பட்ட வாகனங்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

வெனிசுலா நாட்டின் அபுரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ பகுதியில், பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சிக்னல் சந்திப்பில்…

1 மணத்தியாலம் ago