“அடேய் அவ என் பொண்டாட்டி டா”…. துப்பாக்கி முனையில் மணமகளை கடத்திய காதலன்… மாப்பிள்ளை திகைக்க நடுரோட்டில் நடந்த அந்த 5 நிமிட திக் திக் நிமிடங்கள்….!

Spread the love

ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தர்பா சாலை பகுதியில் மர்ம நபர்கள் மூவர் இவர்களது வாகனத்தை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள், அந்த கும்பல் அதிரடியாகச் செயல்பட்டது.

கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி அனைவரையும் மிரட்டிய அந்த கும்பல், மணமகளை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தது. பட்டப்பகலில், கணவன் மற்றும் உறவினர்கள் கண்முன்னே மணமகள் கடத்தப்பட்டதை கண்டு மணமகன் ஹரிபந்து பட்டேல் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த துணிகரச் சம்பவம் குறித்து உடனடியாக தர்பா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மணமகளைக் கடத்திச் சென்றது அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது. காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தப்பியோடிய கடத்தல் கும்பலையும், மணமகளையும் மீட்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அமைச்சர் பதவிக்கு தகுதி இருக்கா?”… “அழுகினி நாடகம் ஆடுறாங்க”… தவெக அமைச்சரை வெளுத்து வாங்கிய திமுக… தூள் பறக்கும் ட்விட்டர் வார்…!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…

11 minutes ago

அதிமுக காலி ஆகிறதா?… தவெக-வில் குவியும் மாஜிக்கள்… எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…

22 minutes ago

பனையூரில் குவிந்த முன்னாள் MLA-க்கள்… எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ரவி மரியா… மொத்தமாக சரிந்த அதிமுக கூடாரம்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…

23 minutes ago

BIG BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்… ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…

27 minutes ago

விஜய் ஆட்சியில் ஊழலா?…. ஆளுநரிடம் ஓடிச் சென்ற நயினார் நாகேந்திரன்… பதற்றத்தில் தவெக வட்டாரம்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்….!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…

31 minutes ago

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

34 minutes ago