இமாச்சலப் பிரதேச மாநிலம் ஊனா மாவட்டத்தில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு தோட்டத்தில் நுழைந்து ஒரு சில கொய்யாப்பழங்களைப் பறித்ததற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளியின் சிறுமி ஒருவரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தண்டித்துள்ளார். அந்தச் சிறுமியின் கைகளை இரும்புச் சங்கிலியால் பிணைத்து, தனது வீட்டுப் படிக்கட்டு மற்றும் கிரில் கேட்டில் கட்டி வைத்து அந்த நபர் சித்திரவதை செய்துள்ளார். “அங்கிள் என்னைக் காப்பாத்துங்க, தெரியாம பண்ணிட்டேன்” என்று அந்தச் சிறுமி கதறி அழுது கெஞ்சியும், அந்த நபருக்குச் சற்றும் இரக்கம் பிறக்கவில்லை.
இந்தக் கொடூரமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறு குழந்தை செய்த சிறு தவறுக்காக, ஒரு முன்னாள் ராணுவ வீரரே இப்படிப்பட்ட மிருகத்தனமான செயலில் ஈடுபட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…