Categories: சினிமா

எம்ஜிஆரை பார்க்க காத்திருந்தவர் பலர்… ஆனால் புரட்சி தலைவரையே காக்க வைத்த இயக்குனரை பற்றி தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமையினால் வாடிய எம்ஜிஆர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அபாரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் எம்ஜிஆர். இவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை நாடி யார் எது கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து கொடுப்பவர்.

எம்ஜிஆர் தான் மட்டுமல்லாமல் தன்னை சேர்ந்தவர்கள் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அதனால் எம்ஜிஆரை தான் எல்லோரும் பார்க்கக் காத்திருப்பார்கள். ஆனால் ஒரு இயக்குனர் எம்ஜிஆரை காக்க வைத்து இருக்கிறார். அது என்ன சம்பவம் அது யாரால் நடந்தது என்பதை பற்றி இனி காண்போம்.

ஏ வி எம் தயாரிப்பில் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இது அமோக வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றி விழாவை நடத்த வேண்டும் என்று ஏவிஎம் முடிவெடுத்தனர். அப்போது கே பாக்யராஜ் எம்ஜிஆர் அவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். உடனே ஏவிஎம் எம்ஜிஆர் இடம் கேட்டிருக்கிறார்கள். அவர் உடனே அடுத்த வாரம் தேதி வைங்க நான் வரேன் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் ஏவிஎம் நிறுவனம் நம்முடைய எல்லா நிகழ்ச்சிகளுக்குமே எஸ் பி முத்துராமன் தான் உரையாற்றுவார். இப்போது அவர் கண் ஆபரேஷன் செய்து இருக்கிறார். அடுத்த மாதம் தேதி வைத்தால் அவர் கொஞ்சம் சரியாகி வந்துவிடுவார் என்று கூறி இருக்கின்றனர். உடனே எம்ஜிஆர் சரி அதன்படியே வையுங்க எல்லோரும் எனக்காக காத்திருப்பாங்க ஆனால் இந்த இயக்குனர் என்னையே காக்க வைத்து விட்டார் என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago