“5 வருஷம் இல்லை… தினமும் பயத்துல வாழறோம்”… பேரவையில் சட்டென வெடித்த சிரிப்பலை… முதலமைச்சர் விஜய்யை சிரிக்க வைத்த MRK….!

Spread the love

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான விவாதம் சட்டப்பேரவையைச் சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, அரசுத் துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கட்டாயமாக்கும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நிலையில், பேரவையில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான வார்த்தைப் போர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விவாதத்தின் போது பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், “ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் நாங்களெல்லாம் டென்ஷனாக இருக்கும்போது, நீங்களெல்லாம் பேரவையில் மிகவும் ரிலாக்ஸாக இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “சிறிய வாய்க்கால் பிரச்சனை என்றால் கூட முதலமைச்சர் நள்ளிரவிலும், காலையிலும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கும் அளவுக்குப் பொறுப்புடன் செயல்படுகிறார். நீங்களாவது ஐந்து ஆண்டுகள் தான் டென்ஷனாக இருந்தீர்கள்; ஆனால் நாங்கள் தினமும் பயத்துடனும் டென்ஷனுடனும்தான் பணியாற்றுகிறோம்” என உடனடி பதிலடி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள இயக்கத்திற்குத் தொண்டர்களைச் சமாளிப்பது தொடக்கத்தில் எளிதாகத் தோன்றினாலும், போகப் போகத் தான் அதன் உண்மையான சிரமம் தெரியும் எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “மேடைகளில் பேசுவது எளிது, ஆனால் ஒரு ஆட்சியை நடத்துவதுதான் கடினம். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகள் எந்தப் போராட்டமும் இன்றி அமைதியாக வாழ்ந்தார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சியின் அனுபவப்பூர்வமான கருத்துக்கள் கலந்த இந்த நகைச்சுவையான விவாதம், சட்டப் பேரவை கூட்டத்தொடரின் சிறப்பம்சமாக அமைந்தது.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

9 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

9 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

9 மணத்தியாலங்கள் ago