தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். இதில் முதலாக பாஜகவுடன் கூட்டணி வைத்து, தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார், எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில், “எடப்பாடி பழனிசாமி, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி, கவனமாக பேச வேண்டும். மெகா கூட்டணி அமைக்க போவதாக ஆரவாரமாக பேசிய எடப்பாடி, அது நடைபெறாத காரணத்தால், அவர் விரத்தியில் இருப்பதாக தெரிவித்தார்.
முன்பு ஒரு தவறு செய்து விட்டேன்! ஆனால் இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்! என்று பாஜகவுடன் கூட்டணி குறித்து ஜெயலலிதா தெரிவித்திருந்தார். தற்போது துரோகத்தின் அடையாளமாக நடமாடி வரும் எடப்பாடி, கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு தகுதி இல்லை.
“எடப்பாடி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை சந்திப்பார்” என முத்தரசன் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில், பழனிச்சாமி பேசுகையில், உங்களைப் போல் நிறம் மாறும் கட்சி அதிமுக அல்ல. பச்சோந்தி போல் நிறம் மாறாமல், கொள்கையின் அடிப்படையில் தான் அதிமுக செயல்படும். சொந்தத் தொகுதியில் நான் தோற்கடிக்கப்படுவேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்திருந்தார். அது “உங்க அப்பாவே வந்தாலும் முடியாது”. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நீங்கள் கூட்டணியில் இருந்தீர்கள். அப்பொழுது சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில், 10 தொகுதிகளை அதிமுக தான் வென்றுள்ளது என பழனிச்சாமி பேசினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு பிரச்சனை வரும் பொழுது, அதை அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுத்து, முன் நிற்க வேண்டும். இதை தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சுட்டிக்காட்டினேன் என எடப்பாடி தெரிவித்தார்.
சொந்த தொகுதியில் என்னை தோற்கடிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவர் தன் சொந்த மாவட்டமான சேலத்திற்கு, பல்வேறு நலதிட்டங்களை செய்துள்ளார். இது குறித்து பாமக எம்எல்ஏ அருள் கூறுகையில், பழனிச்சாமி ஆட்சியில் சேலம் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகளும், மக்களும் பாகுபாடு காட்டாமல் பாராட்டுகின்றனபர் என தெரிவித்தார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…