மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் வேலையை விட்டு நின்றாலோ அல்லது நீண்ட விடுப்பில் சென்றாலோ, அவர்களது பிஎஃப் (PF) கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. புதிய விதிகளின்படி, ஒரு ஊழியர் பணியில் இருந்து விலகினாலும் அவர் 58 வயது அடையும் வரை அவரது கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் வரை பங்களிப்பு இல்லாவிட்டால் வட்டி நிறுத்தப்படும் என்பது பழைய விதியாகும். தற்போதைய நடைமுறைப்படி ஓய்வு பெறும் வயது வரை வட்டி வரவு வைக்கப்படுவது ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும், 58 வயதை எட்டிய பிறகு பிஎஃப் கணக்கு ‘செயலற்றதாக’ கருதப்பட்டு வட்டி வழங்குவது நிறுத்தப்படும் என்பதால், அந்தத் தொகையை உடனே எடுப்பதே லாபகரமானது. ஓய்வு காலத்திற்குப் பிறகும் பணத்தை எடுக்காமல் வைத்திருந்தால், அதன்பின் வரும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பிஎஃப் கணக்கை முறையாக மாற்றிக்கொள்வது, பிற்காலத்தில் பணத்தை எடுக்கும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் பதிவுகளைச் சரியாக வைத்திருக்கவும் உதவும்.
