லஞ்சம் வாங்கினால் இனி அவ்வளவுதான்! உடனே விஜிலென்ஸுக்கு போகும் புகார் லிஸ்ட்.. அலறும் அரசுத் துறைகள்…. CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசுத் துறைகளில் கடைநிலை ஊழியர்கள் முதல் துறைக்கு தலைமை தாங்கும் உயரதிகாரிகள் வரை யார் மீது ஊழல் மற்றும் லஞ்சப் புகார்கள் வந்தாலும், அவற்றைத் தாமதிக்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு (விஜிலென்ஸ்) அனுப்பி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும், பதவி மற்றும் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் லஞ்சக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகளைத் விரைந்து மேற்கொள்வதையும் இந்த உத்தரவு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.