சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா . தற்போது வெளிநாட்டில் அரை டவுசரில் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகை கனிகா இவர் வெள்ளித்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.
அஜித் நடிப்பில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அந்த சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி என்கின்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சன் டிவியில் ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி யில் முதலிடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல்தான். இந்நிலையில் நடிகை கனிகா வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கனிகா வித்யாசமான உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருவார். தற்போது வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் கனிகா அரை டவுசர் போட்டு டி-ஷர்ட் ஒன்றை அணிந்து நடந்து வருவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.
View this post on Instagram