நடிகை பூர்ணாவின் பிறந்தநாள்.. பல லட்சம் மதிப்புள்ள ‘மினி கூப்பர்’ காரை பரிசளித்த கணவர்.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on மே 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மதியம் நீங்கா இடம் பிடித்திருந்தவர் நடிகை பூர்ணா. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியாக அறிமுகமானார் . அதன் பிறகு தமிழில் கந்தக்கோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை பூர்ணா கடந்த 2022 வது வருடம் அக்டோபர் 25ஆம் தேதி தொழிலதிபர் ஷானிக் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

   

 

அதனை தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை பூர்ணா. சமூக வலைதள பக்கங்களில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் நடிகை பூர்ணா. சமீபத்தில் அவரின் திருமண நாளை முன்னிட்டு ஷானிக் நடிகை பூர்ணாவுக்கு 25 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டை பரிசாக அளித்து இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் பூர்ணாவுக்கு ஆடம்பரமான பல பரிசுகளை வழங்கி திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார். அதாவது 2700 கிராம் தங்கம் மற்றும் 25 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டையும் பரிசாக அளித்து இருக்கின்றார். அத்துடன் புத்தம்புதிய கார் மற்றும் சில நிறுவனங்களின் பங்குகளின் உரிமைகளையும் ஷானிக் நடிகை பூர்ணாவுக்கு வழங்கி இருக்கின்றார்.

மொத்தம் இந்த சொத்து மதிப்பு மட்டும் 30 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு இன்று பிறந்தநாள். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கணவர் ஷானிக் சர்ப்ரைஸ்-ஆக நடிகை பூர்ணாவுக்கு கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார். அதன் பிறகு கீழே அழைத்துச் சென்ற ஷானிக் அவருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக அளித்து இருக்கின்றார் .

இந்த காரின் விலை பல லட்சம் மதிப்பிற்கும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த நடிகை பூர்ணா அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போனார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.