Categories: CINEMA

இறுதிக்கட்டத்தை நோக்கி எதிர்நீச்சல் சீரியல்.. முடியும் நேரத்தில் இயக்குனர் வீட்டில் கலைக்கட்டப்போகும் விசேஷம்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் ஒரு விசேஷம் நடைபெற உள்ளது. மக்கள் அதிக அளவில் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். அதிலும் குறிப்பாக மாரிமுத்துவின் கதாபாத்திரம் பல ரசிகர்களை ஈர்த்தது. அவரின் பேச்சு, செயல் என அனைத்தும் அந்த சீரியலுக்கு பிளஸ் ஆக அமைந்தது.

அவர் மறைவுக்குப் பிறகு வேலராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னும் சீரியலில் இயக்குனராக இருப்பவர் திருச்செல்வம் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் மெகா ஹிட் ஆன மெட்டிஒலி என்ற சீரியல் மூலமாக நடிகராகவும் உதவி இயக்குனராகவும் தனது கலைப் பயணத்தை தொடங்கியவர் திருச்செல்வம்.

அதன் பிறகு எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற இரண்டு திரைப்படங்களையும் இயக்கி இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 1533 எபிசோடுகள் ஓடி சூப்பர் ஹிட் கொடுத்த கோலங்கள் என்ற நாடகத்தையும் இயக்கியவர் இவர்தான்.

தொடர்ச்சியாக அல்லி ராஜ்ஜியம், பொக்கிஷம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல நாடகங்களை இயக்கிய இவர் 2022 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்க தொடங்கினார். இன்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சலில் நடித்த மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த எதிர்நீச்சல் குடும்பத்தையும் நிலைகுலைய செய்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி மாரிமுத்து மரணமடைந்தார்.

அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலு ராமமூர்த்தி சேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த சீரியல் என்ற பெயரில் எடுத்து வரும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் திருச்செல்வம் வீட்டில் ஒரு விசேஷமும் நடைபெற இருக்கின்றது. அதாவது இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் மகள் பிரியதர்ஷினிக்கு வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆகையால் திருமண நிகழ்வுகளை இப்போது மிகச் சிறப்பாக கவனித்து வருகின்றார். மேலும் பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களையும் வைத்து வருகின்றார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago