தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணியை பலமாக வைத்திருக்கும் கட்சிகளும் மேலும் தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. இதனிடையே NDA கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்க்க வேண்டும் என்பதே இபிஎஸ் எண்ணமாக இருக்கிறது.
கூட்டணியில் இருக்கும் தமாகா தலைவர் ஜி.கே வாசன் அதே முடிவையே அறிவித்துள்ளார். பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால் 2026 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி என்றும் ஜி கே வாசன் குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
