9 முறை MLA, ஒரே நாளில் தூக்கி வீசிய இபிஎஸ்… தமிழக அரசியலில் வெடித்தது புதிய சர்ச்சை… சிக்கலில் அதிமுக…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து ஓபிஎஸ் முழுமையாக நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பொறுப்பை இபிஎஸ் ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகிய நிலையில் சமீபத்தில் 2026 தேர்தலுக்காக இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என ஈபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். ஆனால் திடீரென ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். இது கட்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்து.

இந்நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் பட்டியலில் கருணாநிதி (14 முறை), துரைமுருகனுக்கு (10) அடுத்த இடத்தில் இருப்பவர் செங்கோட்டையன் (ஒன்பது முறை). அப்படிப்பட்ட மூத்த அரசியல்வாதியான அவரை விளக்கம் கூட கேட்காமல் ஒரே நாளில் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக தற்போது வரை உள்ளது. மூத்த நிர்வாகியை அதிமுக இவ்வாறு கையாண்ட விதம் குறித்து தற்போது மேலும் சர்ச்சை வெடித்துள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இபிஎஸ் எடுத்த இந்த முடிவு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.