இபிஎஸ் பதவி பறிப்பு.. அதிமுகவில் அடுத்த பரபரப்பு…. இரவோடு இரவாக ஷாக் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 14, 2026

Spread the love

அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி சி.வி.சண்முகம் அதிரடி கருத்துக்களை முன்வைத்துள்ளார். நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றிய கணமே இபிஎஸ்-ன் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதாகவும், தங்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியது சட்டப்படி செல்லாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்குழுவைக் கூட்டக் கோரிக்கை விடுத்த நிலையில், அங்கே எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அஞ்சி, தற்காப்பு நடவடிக்கையாகவே தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சாடினார். இந்த மோதல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.