விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் அரங்கேறி வரும் அதிரடி அரசியல் மாற்றங்களும் உட்கட்சி மோதல்களும் ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளார். வல்லம், மயிலம், திண்டிவனம், செஞ்சி, ஒலக்கூர் ஆகிய ஒன்றியச் செயலாளர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர். அண்மையில் திண்டிவனத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருதரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட நேரடி மோதலே இந்த அதிரடி நடவடிக்கைக்கு உடனடி காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் புயலுக்குப் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சி முக்கியப் பங்காக அமைந்துள்ளது. அதிமுகவில் இருந்து ஏற்கனவே சிலர் தவெக-வில் இணைந்து வரும் வேளையில், சி.வி.சண்முகமும் தவெக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த சண்முகம், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்காக மட்டுமே இத்தனை காலம் சமரசம் செய்துகொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தவெக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியும், அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததே இந்த விரிசலுக்கு அஸ்திவாரமாக அமைந்தது.
தேர்தல் தோல்விகளுக்குப் பிறகாவது தவெக-வுடன் கூட்டணி அமைத்தால் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என சண்முகம் தரப்பு வாதிட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ திமுகவின் மறைமுக ஆதரவோடு தான் முதலமைச்சராக வர வேண்டும் என விரும்புவதாகக் குற்றம் சாட்டியே சண்முகம் தனது கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். இதன் விளைவாகவே, சட்டமன்றத்தில் தவெக-விற்கு ஆதரவாகப் பேசிய சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவி எடப்பாடியால் பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட பின்னரும் சண்முகம் தொடர்ந்து எடப்பாடி தலைமைக்கு எதிராகத் தனி அணியாகவே செயல்பட்டு வந்தார்.
தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, சி.வி.சண்முகம் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்ட அதிமுகவையும் அப்படியே தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைப்பதற்கான ரகசியத் திட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளர்களுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விவரம் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் சென்றுள்ளது. தனது கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் சண்முகம் நிகழ்த்தவிருந்த இந்த அரசியல் ஆபரேஷனை முன்கூட்டியே மோப்பம் பிடித்ததால்தான், எடப்பாடி பழனிசாமி சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களைக் கட்சியை விட்டு ஒட்டுமொத்தமாகக் காலி செய்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…