தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் அதிமுகவில் பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
அதிமுகவின் பிரசாரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி இருந்தது. அப்போது எடப்பாடி சூசகமாக பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய டிடிவி தினகரன், தன்னுடைய கட்சி தொண்டர்களை வைத்தே எடப்பாடி பழனிச்சாமி, TVK கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எனவும், அந்த அளவிற்கு அதிமுகபலவீனமாகிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார். முன்னதாக, அதிமுக-தவெக கூட்டணி உறுதியானால் TTV-க்கு சிக்கல் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்தனர்.
