மதுரை மாவட்டம் பி.பீ.குளம் பகுதியை சேர்ந்த கபில் முகமது என்பவரிடம் பண மோசடி செய்த வழக்கில் காரைக்குடியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து இரட்டைப்பு லாபம் தருவதாக கூறி ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் பணம் சரியாக கொடுத்தவர்கள் பிறகு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணம் தராமல் தட்டிக் கழித்துள்ளனர். இதனால் மதுரை குற்றத் தடுப்பு போலீசில் கபில் முகமது புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் அதிமுக கவுன்சிலர் பிரகாஷை கைது செய்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
