தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டன. குறிப்பாக அடுத்த முறை திமுக ஆட்சியை பிடிக்க கூடாது என்பதில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜய் உறுதியாக உள்ளார். அதனைப் போலவே விஜய்யை தங்கள் பக்கம் இழுத்து மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து பல முரண்பட்ட கருத்துக்கள் வெளி வருகின்றன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறிய அமித்ஷா, முதல்வர் இபிஎஸ் தான் என குறிப்பிடாதது சர்ச்சையானது. இப்படியான நிலையில் 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, தானே முதல்வர் வேட்பாளர் என இபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் அமித்ஷாவிற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்து இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்
