பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை வளர்ப்பு சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு கட்டடத்தின் சுவரின் மீது ஏறி வீதியில் குதித்த சிங்கம் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி இருக்கிறது.
🚨🇵🇰Lion escapes in Pakistan's Lahore, attacks woman and children#PakistanArmy #pakistan #Lion #justin pic.twitter.com/tTmQvLZBx3
— Europe central (@EuropeCentral_) July 4, 2025
அதுமட்டுமின்றி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் இந்த சிங்கம் தாக்கியதாக தந்தை ஒருவரும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சிங்கத்தை வளர்த்து வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இதனை அடுத்து போலீசாரால் அந்த சிங்கம் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிங்கங்களை செல்ல பிராணிகளாக வளர்ப்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
