இபிஎஸ் போட்ட பக்கா பிளான்… செம அப்செட் ஆன செங்கோட்டையன்… தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்த பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் ஈபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். அதற்காக தேசிய கட்சியான பாஜக உடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக கூட்டணி அமைத்து அதனுடன் சேர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு கட்சி சிதறுண்டு கிடைக்கின்றது. இபிஎஸ் அதிமுகவின் பொறுப்பை ஏற்ற உடன் கட்சியிலிருந்து முக்கிய முகங்கள் பலரையும் நீக்கினார். முதலில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை நீக்கிய இபிஎஸ் இறுதியில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து தூக்கி வீசி விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைய உள்ளார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் கூட விஜய் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

   

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியை பதட்டத்திலேயே வைத்திருந்த செங்கோட்டையனுக்கு தற்போது அந்த நிலை ஏற்பட்டிருப்பது போல தெரிகின்றது. அந்த வகையில் இபிஎஸ் ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வர உள்ளார்கள் என்று செங்கோட்டையன் அனைத்து இடத்திலும் கூறிவந்த நிலையில் தற்போது அதை இபிஎஸ் செய்துள்ளது தேர்தல் களத்தை மேலும் சூடு படுத்தி உள்ளது.