“தாத்தா… டிரஸ் தைக்கணும்…” பேத்தி வயசுன்னு கூட பார்க்கல… 57 வயசில் அத்துமீறிய முதியவர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பள்ளிச் சீருடை தைக்க வந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 57 வயது தையல்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி நான்காம் வகுப்பு படித்து வரும் நிலையில், தைத்துத் தரப்பட்ட சீருடை அளவில் மாற்றம் செய்யப் பார்த்திபன் என்ற அந்த தையல்காரரின் வீட்டிற்குத் தனியாகச் சென்றுள்ளார்.

அந்தச் சமயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், சிறுமிக்கு அத்துமீறிப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததுடன் தவறாக நடந்து கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்து அழுதுகொண்டே சிறுமி நடந்ததைக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகக் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

   

இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த மற்றொரு தையல்காரரான 61 வயது முதியவர், தனது நண்பரின் 10 வயதுடைய பேத்தியை  பூங்காவிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காகக் கைதாகியுள்ளார். இந்த சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.