அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பால் பாக்கி கிருஷ்ணனை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஈபிஎஸ் நீக்கியுள்ளார். சி. கிருஷ்ணன் சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தற்போது பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார்.
இபிஎஸ் இன் கோட்டையில் நிகழ்ந்த இந்த திடீர் நீக்கம் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே அதிமுகவில் தனக்கு எதிராகவும் கட்சிக்கு எதிராகவும் செயல்படுபவர்களை ஈபிஎஸ் தொடர்ந்து நீக்கிவரும் நிலையில் தற்போது இந்த நீக்கம் அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது
