அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் முடிவுக்கு வந்து இருதரப்பும் இணைந்ததைத் தொடர்ந்து, கட்சியில் புதிய ஒழுங்குமுறையை ஏற்படுத்தும் நோக்கில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களாக அடையாளம் காணப்பட்டு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை இபிஎஸ் நியமித்திருந்தார்.
தற்போது இருதரப்பும் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், பழைய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சிலர் மீண்டும் தங்களது முந்தைய பதவிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வருவது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் தங்களின் பழைய கட்சிப் பொறுப்புகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும், தலைமை அறிவித்த புதிய நிர்வாகிகளே அந்தந்த பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றும் இபிஎஸ் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
