ரூட்டை மாற்றிய EPS… இனிமேல் இப்படித்தான்…! இரு கட்சிகளையும் எதிர்த்து களம் காணும் புதிய வியூகம்…!!

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார். திமுக எதிர்ப்பில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தவெக கட்சியை மட்டுமே அவர் பிரதானமாக விமர்சித்து வருவதாக அண்மையில் செய்திகள் பரவின. இந்தத் தகவல் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் EPS புதிய நகர்வை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான தேர்வு முறைகேடு குறித்த அறிக்கை ஒன்றை முன்வைத்து, ஆளும் திமுக அரசை அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் நிறுத்தாமல், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தவெக கட்சிக்கும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இவ்வாறாக திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்த்து அவர் களம் காண்பது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.