எஸ்பி வேலுமணிக்கு மீண்டும் பவர்… தங்கமணிக்கு புதிய பொறுப்பு…. EPS-ன் அதிரடி மாஸ்டர் பிளான்….. அதிமுகவில் திடீர் டுவிஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 10, 2026

Spread the love

அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, வரும் அக்டோபர் 17, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தப் பொதுக்கூட்டங்களைச் சிறப்பாக நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, நத்தம் ஆர். விஸ்வநாதன் மற்றும் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தப் பட்டியலில் சி.வி. சண்முகத்தின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த இடைத்தேர்தல்களில் சற்று ஒதுங்கியிருந்த எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சீனியர் தலைவர்களை மீண்டும் தீவிரமான கட்சிப் பணிகளுக்குள் கொண்டுவரும் வியூகத்தின் ஒரு பகுதியாகவே எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கையும், பொறுப்புப் பகிர்வும் பார்க்கப்படுகிறது.